| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a மன்னார் கோயில் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a நிலாப்பாறையின் மீதாக இரண்டு கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. படுக்கைகள் திறந்த வெளியில் இப்பாறை மீது செதுக்கப்பட்டவை. இவற்றின் தலைப்பகுதியில் 2 வரிகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுள்ளது. கல்வெட்டின் மூன்றுபுறமும் இருக்கோடுகள் கட்டமிட்டு செவ்வகமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும். என்பது இக்கல்வெட்டின் வாசகம் குணாவைச் சேர்ந்த இளங்கோ என்பவரால் இப்பள்ளி செய்விக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும், 'பளி’ என்பதில் ’ள்’ மெய்சேர்த்து பள்ளி என்று படித்தல் வேண்டும். இக்கல்வெட்டு திறந்த வெளிப்பாறை மீதுள்ள கற்படுக்கை மீது வெட்டப்பட்டு பள்ளி என்று குறிப்பதால் பள்ளி என்று தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் குறிக்கப்படுபவை படுக்கைகளே என்றும் பள்ளி கொள்தல் - உறங்குதல் என்ற பொருளிலேயே வருகிறது என்பதும் நோக்கத்தக்கது. ‘ளங்கோ’ என்ற சொல் இளவரசன் என்ற பொருளைத் தருகின்றது. கரூர் அருகிலுள்ள புகளூர் என்ற இடத்தில் ‘பெருங்கடுங்கோ மகன் ளங்கடுங்கோ ளங்கோ ஆகி அறுபித்த கல்’ என்று வருவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. எனவே இவ்விரு கல்வெட்டும் சேர மன்னர்களோடு தொடர்புடையதாக கொள்ளலாம். மேலும் அம்பாசமுத்திரம் என்ற ஊரின் கோயில் கல்வெட்டுக்களில் அவ்வூரின் பெயரை ‘ளங்கோய்க்குடி’ எனச் சுட்டுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் ஐ. மகாதேவன் இளங்கோ என்பது ஆட்பெயர் என்றும் வைசியர் குலத்தவர் ‘மணிகள் தெரிந்த இளங்கோக்கள்’ என்று பிற்கால இலக்கிய குறிப்புகளில் சுட்டப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். |
| 653 | : | _ _ |a மன்னார்கோயில், தமிழ்- பிராமி கல்வெட்டு, அய்யனார் குளம், இராசப்பாறை, நிலாப்பாறை, பண்டைய தமிழிக் கல்வெட்டு, திருநெல்வேலி மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a அய்யனார்குளம்-பொதிகை மலை, இராசாப்பாறை, நிலப்பாறை |c அய்யனார்குளம் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம் |
| 914 | : | _ _ |a 8.732535 |
| 915 | : | _ _ |a 77.4214278 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000085 |
| barcode | : | TVA_INS_000085 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |